:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு டிப்போவில் உள்ள பேருந்துகள் பழுதடைந்த நிலையில், பராமரிப்பு இல்லாமல், ஷட்டர்கள் கிழிந்து பயணிகள் அமரும்
சீட்டுகள், மேற்கூரை ஓட்டை உடைசலான நிலையில் இருப்பதால், மழை காலங்களில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
குறிப்பாக,மதுரையில் இருந்து குருவித்துறை செல்லும் சோழவந்தான் அரசு பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தில் மேற்கூரை பழுதடைந்த நிலையில் இருந்ததால், நேற்று பெய்த கன மழைக்கு பேருந்து மேற்கூரைவழியாக மழை நீர் அருவி போல் கொட்டியதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் மழையில் நனைந்தபடி அங்கும் இங்கும் அலைந்தது காண்போரை மிகவும் பரிதாபத்துக்
குரியதாக்கியது .
தமிழக அரசும் போக்குவரத்து நிறுவனமும் புதிய பேருந்துகள் வாங்குவதில் செலுத்தும் கவனத்தை பழைய பேருந்துகளை பராமரிப்பதிலும் ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் .
அதேபோல், சோழவந்தானிலிருந்து- மதுரை அண்ணாநகர் நிலையத்துக்கு குறித்த நேரத்தில், அரசு நகரப் பேரூந்துகள் இயக்கப்படவில்லை என, திருவேடகத்தை சார்ந்த நாதன் தெரிவித்தார்.
பல பேரூந்துகள் வழியிலே பழுதாகி நின்று விடுவதாகவும் அவர் கூறினார்.














