முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில், ‘ நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருப்பது வேதனையை அளிக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமல் காரணமாக இது நேரிட்டுள்ளது.
விரைவான வேகத்தில் வளரும் தன்மை கொண்டது இந்திய பொருளாதாரம். ஆனாலும் மந்த நிலை நிலவுவதற்கு அனைத்து நிலைகளிலும் அரசின் தவறான நிர்வாகமே காரணம். அரசுக்கு 1.76 லட்சம் கோடி பணம் அளித்தது மூலம் ரிசர்வ் வங்கி பின்னடைவை சந்தித்துள்ளது’ என்றார்.














