டெஸ்ட்போட்டி: பவுலிங்கில் கலக்கிய இந்திய அணி – 183 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து

0
708

நாட்டிங்காம்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
ஆட்டத்தின் முதல் ஓவரிலயே பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் சிறப்பாக அடி 64 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஷார்துள் தாகூர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு சுருண்டது.

. இந்தியா சார்பில் அருமையாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மாவும், ராகுலும் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here