சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது திருச்சியில் முகாம் சிறையில் நஞ்சு அருந்திய நிலையில் உயிருக்கு போராடும் ஈழத் தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டவர் நிலை.
இங்கு பெரும்பாலும் ஈழத்தமிழர் விசா இல்லாமல் தங்கியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அடைக்கப்பட்டுள்ளனர். வங்கதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். இங்கு அவர்கள் நடத்தப்படும் முறை மிகவும் கடுமையானது என்ற குற்றச்சாட்டு உண்டு.
இங்குள்ள பலர் சிறைத்தண்டனை தண்டனைக்காலம் முடிந்தபின்பும் வாடுகின்றனர். விடுவிக்கப்படும் ஈழத்தமிழர் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக இலங்கைக்கு கட்டாயமாக அனுப்பப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிலையில், வங்க தேசத்தவர் உட்பட 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். முன்னதாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்தும் அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது. இன்னமும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் மேலிட உத்தரவுக்கு காத்திருக்கிறார்கள் என்பதால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.













