தடுப்பூசி போட்டால் பெட்ரோல் ஃபிரீ

0
976

இந்திய அரசாங்கம் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது, அந்த வகையில் பல தனியார் நிறுவனங்களும் புதுமையான முறையில் தங்களால் முடிந்த விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாண்டிச்சேரி மாநிலத்தில் வில்லியனூரில் நடைபெற உள்ள தடுப்பூசி முகாம் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் 1/2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும், கூடுதல் சிறப்பாக முன்களப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here