கடந்த நான்கு நாட்களாக நடந்த மீட்புப் பணியில் இடையே நடுநடுக்காட்டு பள்ளி ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு மீட்பு துறை ,அண்ணா பல்கலைக்கழகம் ,தொழில்நுட்ப குழுக்கள் ஆகியவை ஒருங்கிணைத்து முன்யோசனையுடன் செயல்பட்டிருந்தால் மீட்பு சாத்தியமாகி இருக்கும் என்ற விமர்சனமும் எழுந்தது.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜிஎஸ் மணி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ‘தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகள் சரியாக செயல்படவில்லை. இனியாவது இத்தகைய விபத்துகள் நிகழாமல் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்’என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்க விடவில்லை. தொடர்ந்து இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள உத்தரவிடவேண்டும் .சுர்ஜித் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.












