சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் மார்ட்டின் கொலையுண்டதற்கு முன்பு ஜெயராஜ் பென்னிக்ஸ் போல் காவல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆதியில் காவல்துறையினரால் தனக்கு மிகுந்த ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். அதையே தற்சமயம் அவரது குடும்பத்தினரும் இந்து முன்னணி அமைப்பினரும் வழிமொழிந்து வருகின்றனர்.
எனவே கொலை குறித்து மற்றொரு விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என்பதும், மார்ட்டின் போலீஸ் சித்திரவதைக்கு ஆளாகி பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதும் இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.