சாத்தான்குளம் வாலிபர் கொலை காவல்துறை தீவிரவாதிகள் கூட்டுச் சதியா? இந்து முன்னணி போடும் குண்டு

0
1582

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் மார்டின் கொலையுண்டதற்கு முன்பு பேசிய வீடியோவும் கொலைக்கு பின்பு அவர்கள் உறவினர் வெளியிடும் சந்தேகமும் கொலைக்கு காவலர்கள் உடந்தையாக இருந்ததாக அரசியல் கட்சியினரை அறிக்கைவிட வைத்துள்ளன.

கொலையுண்ட

மார்ட்டின் குடும்பத்தினர் இடையில் மாநில இந்து பொதுச் செயலர் டாக்டர் அரசுராஜா, மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார். மாநில செயலர் வழக்கறிஞர் குத்தாலிங்கம், நெல்லை மண்டல அமைப்பாளர் பெ. சக்தி வேலன் ஆகியோர் கூறுகையில் இந்த கொலைக்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து மார்ட்டின் குடும்பத்தினரை அச்சுறுத்தி வந்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து மார்ட்டின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் சரியான நடவடிக்கை இல்லை. மேலும் இந்த கொலையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் ஈடுப்பட்டிருக்கலாம் என சந்தேகிகிறோம். காவல்துறையினரும் இதில் உடந்தையாக இருந்ததாக புகார் உள்ளதால் தமிழக முதல்வர், இதனை விசாரித்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here