நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் தோண்டத் தோண்ட புதுப்புது தகவல்கள் கிடைக்கின்றன. அதேபோல் மேலும் பலரும் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது .சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரியங்கா ஆள் மாறாட்டம் செய்து தேர்வை சந்தித்துள்ள ரகசிய தகவலை அடுத்து அவரை தேனிக்கு அழைத்துவந்து விசாரித்த சி பி சி ஐ டி போலீசார் இன்று கைது செய்தனர்.













