தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் இருவர் வத்தலகுண்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காரில் திரும்பபினர்.
தேவதானப்பட்டியை அடுத்த நல்ல கருப்பன்பட்டி பகுதியில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்ததில் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு கன்னியாஸ்திரிகள் மற்றும் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் பெரியகுளம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.











