கொரோனாவுக்கு பின்னும் மூடப்படாத புதுக்கோட்டை காவல் நிலையம்: பொதுமக்கள் கலக்கம்

0
1234

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட சுமார் 20 போலீசார் பணிபுரிகின்றனர். கடந்த 13ஆம் தேதி இவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் அவரது இரு பிள்ளைகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால் அதன் பின்பும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காவல் நிலையம் மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்படவில்லை. வழக்கம்போல பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கொரோனாவை பற்றி அறிந்த பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். புதுக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரா புரத்திலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பெரும்பாலோர் காவல்துறையிலும் பிற அலுவலகங்களிலும் பணிபுரிபவர்கள். எனவே, அங்கும் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here