தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் (ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்)ஆசீர்வாதபுரம் விலக்கு அருகே சுந்தரநாசியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபரை சிசிடிவி காட்சி மூலம் தேடிவந்த போலீசார் அவர் சடையன் கிணறு சங்கரபாண்டி மகன் முத்துப்பாண்டி என அறிந்து கொண்டனர்.
அதையடுத்து அவரை தேடிச் சென்ற சாத்தான்குளம் போலீசார் வெளியூருக்கு தப்ப முயன்ற நிலையில் கைது செய்தனர்.








