தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிறந்த மாணவியாக மொழிப்போர் தியாகியின் பேத்தி தேர்வு

0
718

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2017 பேட்ச் மாணவி பவனா, சிறந்த மாணவி (Best Outgoing Student )விருது பெற்றார்.

பவனா, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கேப்டன் செந்தில் செல்வன் – பிரபல மருத்துவர் விஜயலட்சுமியின் மகள். மொழிப்போர் தியாகி சாத்தான்குளம் மகாராசன், நல்லாசிரியர் பாலசிங் ஆகியோரின் பெயர்த்தி.

இவர் முதல் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை முதல் மதிப்பெண் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினரான மேற்கு வங்க எக்சைஸ் கமிஷனர் டாக்டர் உமாசங்கர், பவனாவை பாராட்டி பரிசு வழங்கினார். இவர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் முதல் பேட்ச் மாணவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here