உலகக் கோப்பை ஹாக்கி பயிற்சிக்கு கோவில்பட்டி இளம் வீரர் தேர்வு

0
314

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல், சங்கரி தம்பதியின் மகன் மாரிஸ்வரன். ஹாக்கி வீரரான மாரிஸ்வரன் பள்ளி காலம் முதல் ஹாக்கியில் அசத்தி வருகிறார். கோவில்பட்டி அரசு கல்லூரியில் பயின்று வரும் மாரிஸ்வரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி அணிக்காக விளையாடி வந்தார்.

மத்திரயசின் ஹீலோ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் மாரிஸ்வரன் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் கடந்த ஆண்டு டிசம்பர் 25ந்தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 18ந்தேதி வரை பெங்களுரில் நடைபெற்ற இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் மாரிஸ்வரன் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கிடையே nஉலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாம் நாளை பெங்களுருவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாரிஸ்வரன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் ஜூனியர் ஹாக்கி அணிக்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் கனிமொழி எம்.பி.யை மாரிஸ்வரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய கருணாநிதி : எ லைஃப் என்ற புத்தகம் மற்றும் நிதியுதவி வழங்கி கனிமொழி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பின்போது , தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேனுகாலட்சுமி, பொருளாளர் கே.ராஜராஜன், இணை செயலாளர்கள் எஸ்.திருமால்வளவன் மற்றும் டி.கிலெமண்ட் லூர்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here