மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில், சிவசேனா முதல்வர் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால் அந்த அழைப்பை பாஜக மறுத்துவிட்டது.
இதையடுத்து சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். சிவசேனாவும் தேசியவாத காங்கிரசுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுவரை எதிர்க்கட்சி வரிசையில் அமரவே மக்கள் வாக்களித்தனர் என்று பாவ்லா காட்டிக்கொண்டிருந்த தேசிய வாத காங்கிரஸ், ‘ இன்று பாஜக உறவை முறித்துக்கொண்டுவந்தால் சொந்தம் கொண்டாடலாம்’ என அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் நவாப் மாலிக், ‘ பாஜக அரசின் அமைச்சரவை தொடர்பை விடவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தார். அதை சிவசேனாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. நாளை தேசியவாத காங்கிரஸ் எம்.எ.ஏக்கள் கூட்டம் நடைபெறும் அதே சமயத்தில் மத்திய ஆட்சியிலிருந்து சிவசேனா அமைச்சர்கள் விலகுவார்கள் என நம்பப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாட்டை அடுத்து காங்கிரசின் நிலையும் அசைவாடுவதால் சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோரும் என்பதை உறுதி செய்யமுடிகிறது.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரசிச்னை உச்சத்தில் இருக்கும் இந்த சூழலில் ஆட்சியமைக்கும் சூழலை கெடுத்துவிட்டு புதிய தேர்தலுக்கு எந்த கட்சியும் வழிவகுக்காது என்றே தெரிகிறது.
காங்கிரசின் எம்.எல்.ஏக்கள் ஜெய்பூரிலும், சிவசேனா எம்.எக்.ஏக்கள் மும்பையில் அக்கட்சியின் அலுவலகம் அருகில் உள்ள ஓட்டலிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.














