நெல்லை காவல் அதிகாரிக்கு பாராட்டு

0
419

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்
அர்ஜுன் சரவணன். இவர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது.

சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்’ என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் பிச்சைராஜா என்பவர்
அர்ஜுன் சரவணனின் ட்விட்டர் கணக்கில், ‘நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது பெற்றோர்கள் வயதானவர்கள். தச்சநல்லூர் விக்னேஷ் நகரில் வசிக்கிறார்கள். ஏதேனும் எமர்ஜென்சி என்றால் என்ன நம்பரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?’என்று கேட்டுள்ளார்.


இதையடுத்து அவருடைய குடும்பத்தினரை காவல்துறையினர் சந்தித்து மாஸ்க், சானிடைசர்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிச்சை ராஜா ட்வீட்டைக் குறிப்பிட்டு, “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம் ப்ரோ” என்று தெரிவித்தார்.

அர்ஜுன் சரவணனின் இந்தப் பதிலைக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here