ரூ.14 ஆயிரம் லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது

0
1562

கடம்பூர் அருகே உள்ள கே .சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷன் செய்ய விண்ணப்பம் செய்துள்ளார். சப் டிவிஷன் செய்து தர கே. சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராகவன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுறுத்தலின்படி ராகவன் ரூ 14 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.அப்போது அங்கு இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here