போலீஸ் அலட்சியத்தால் பாளை.யில் தொடரும் திருட்டு முயற்சி

0
430

பாளையங்கோட்டை கேடிசி நகர் அன்னை நகர் கிழக்கு பகுதி 9ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள்

இருவர் பீரோ முதல் பெட்டிகள் வரை தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டின் உரிமையாளர்கள் ஆட்டோவில்
வீட்டிற்கு வந்துள்ளனர். அது குறித்து வீட்டின் அருகில் ரோட்டில் நின்றிருந்த 3ஆவது நபர் சிக்னல் கொடுத்துள்ளார் .

இதையடுத்து வீட்டின் உள்ளே இருந்த இரு மர்ம நபர்களும் வெளியே ஓடி வந்தனர். அவர்களை வீட்டின் உரிமையாளர் பிடிக்க முயற்சி செய்ததில் ஒரு நபர் பைக்கையும் செல் போனையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார் . மற்றொருவர் ரோட்டில் ஏற்கனவே வண்டியுடன் நின்றிருந்தவருடன் தப்பிசென்றார்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். திருட வந்தவர்கள் விட்டுச் சென்ற பைக் மற்றும் செல்போனை கைப்பற்றி னார்.

ஏற்கனவே இந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் ஆடைகளை திருடினார்.இதுகுறித்து போலீசாருக்கு நேரிலும் போனிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அப்போது அவர்கள் உரிய முறையில் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற திருட்டுச் சம்பவம் நிகழ்ந்து இருக்காது என்று அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here