சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயர்புரம் விலக்கில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் மனைவி ஜேசு கனி. கடந்த 30ஆம் தேதி பைக்கில் அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்கள்.அவர் தண்ணீரை மொள்ள குனிந்தபோது,கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ஜேசு கனி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்த சாத்தான்குளம் போலீசார்.வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டிருப்பதை தெரிந்து கொண்டனர்.
புலன் விசாரணையில்.
பத்தமடையை சேர்ந்த இ ருவர் இதில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த சாத்தான்குளம் போலீசார்.பத்தமடையை சேர்ந்த மகாபிரபு (30 ) என்பவரை கைது செய்தனர்.அவரது கூட்டாளியான செல்வனிடமே நகை இருப்பதாக அவர் கூறினார்.இதையடுத்து செல்வனை போலீசார் தேடிவருகின்றனர்.
கொரோனா காலத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை இருந்த ஊரடங்கு சமயத்தில், துணிச்சலாக இவ்வளவு தூரம் வந்து நகை பறிப்பில் ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.