கோவை காளப்பட்டி ரோடு நேரு நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல மேலாளர் இன்பராசா (46) என்பவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதில், ’கடந்த 2016ஆம் ஆண்டு பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் போலி ஆவணங்களை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து சேலத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார். அந்த காரை முறைப்படி பதிவு செய்யாமல் போலி எண்ணை காரில் பொருத்தி ஓட்டி வருகிறார். வங்கியில் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தவில்லை. இதுகுறித்து பலமுறை வங்கியிலிருந்து தொடர்பு கொண்டும் சரியான பதில் அளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலியான ஆவணங்களை ஆராயாமல் கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் மீது வழக்கு எதுவும் பதியவில்லை.