ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அரசின் முடிவுக்கு எதிராக வதந்திகள் பரப்பி வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், இயல்பு நிலை திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை மிரட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எஸ்.ஐ., ஏட்டுகள், போலீசார், பெண் போலீசார் மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.