உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன், கணவருக்கு உடல்நிலை பாதிக்க அவரின் மனைவி, ஒரு மந்திரவாதியிடம் சென்று கணவரின் உடல்நிலை சரியாக ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது அவர் தினமும் கணவருக்கு காலையில் 4 லட்டுகளும், மாலையில் 4 லட்டுகளும் சாப்பிட கொடுக்க வேண்டும், இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் தரக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார்.
மந்திரவாதியின் ஆலோசனைப்படி சில மாதங்களாக கணவருக்கு காலை, மாலை என நாள்தோறும் மொத்தம் 8 லட்டுகளை மனைவி வழங்கியுள்ளார். தினமும் லட்டுகளை மட்டும் சாப்பிட்டு வெறுத்துப் போன கணவர் தற்போது விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வினோத வழக்கை ஆய்வு செய்த குடும்பநல ஆலோசகர் முதல்கட்டமாக கணவன், மனைவிக்கு கவுன்சிலிங் தர முடிவு செய்து கவுன்சிலிங் மையத்துக்கு அனுப்பியுள்ளார்