ஸ்டேட் பாங்க் ஏடிஎம்மில் நூதனமாக திருடிய அரியானா கொள்ளையன் கைது

0
1110

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் நூதனமான கொள்ளை நடந்தது. இது வெளிமாநிலத்தவர் கைவரிசை என சந்தேகப்பட்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படையினர் அரியானா சென்று அம்மாநில போலீசாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஸ் என்ற கொள்ளையன் சிசிடிவி காட்சி அடிப்படையில் கண்டறியப்பட்டான்.அவனை போலீசார் கைது செய்தனர்.நான்கு குழுக்களாக பிரிந்து 45 லட்சம் வரை இவர்கள் ஏடிஎம்மில் திருடி உள்ளனர். மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here