கேரளாவில் அய்யா வைகுண்டருக்கு மணி மண்டபம்

0
70

திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கேரள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருவனந்தபுரத்தில் நடந்தது

விழாவிற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமை வகித்தார்.கலாச்சாரத்துறை அமைச்சர் சசிசெரியன்,கல்வி அமைச்சர் சிவன் குட்டி, நிதி அமைச்சர் பாலகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கேரள கைவினை பொருள் மேம்பாட்டு கழக தலைவர் ராமபத்திரன் அனைவரையும் வரவேற்றார்.

மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக் கல்லை பால பிரஜாபதிஅடிகளார் ,நாட்டினார். எம்எல்ஏக்கள் பிரசாந்த், ஜாய், அன்சலன், வின்சன்ட் ஸ்டீபன் ,ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மணிமண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்ட முதல்வருக்கு தமிழகம்- கேரளம் மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்துநினைவு பரிசு வழங்கப்பட்டது தமிழகத்தின் சார்பில் சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ், மதுரை தொழிலதிபர் தென்னவன், குளச்சல் டாக்டர் பிரேம்குமார்,கொடுங்குளம்ராஜேந்திரன் புளியங்குடி தொழிலதிபர் செல்வ பிரகாஷ் அன்புவனம் நிர்வாகி டாக்டர் ஆர் தர்ம ரஜினி, கேரளா தர்மமணி, வினோத்,கோமதி ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கினர். கலாச்சாரத்துறை இயக்குநர் திவ்யா எஸ் ஐயர் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here