திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி – சாரா தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் கல்பனா (26) ஆகியோர் இன்று வந்திருந்தனர். அப்போது கல்பனா கையில் அணிந்து இருந்த வைரக் கைச்செயின் அவர் கடலில் புனித நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென கடலில் தவறி விழுந்தது.

உடனே போலீசார், கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தேடி வைர கைச்செயினை மீட்டு கல்பனாவிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து கைச்செயினை பத்திரமாக ஒப்படைத்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.