கும்பிடுவது போல் நடித்து அம்மனின் கழுத்தில் கிடந்த நகையை அபேஸ் செய்தவர் கைது

0
1022


கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாளையததில் அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவிலில் இன்று காலை சாமி கும்பிடுவது போல ஒரு நபர் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் கோயிலில் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தினால் பூசாரி கோயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது கோயிலுக்குள் சாமி கும்பிடுவது போல் நின்று கொண்டிருந்த மர்மநபர் அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவ முயன்றார்.

மீண்டும் கோவிலுக்கு வந்த பூசாரி அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் .அப்போது அந்த மர்மநபர் கோயிலை விட்டு வெளியே செல்ல முயன்ற போது பூசாரி ‘திருடன் திருடன்’ என சத்தம் போட்டு அந்த வாலிபரை துரத்திப் பிடித்தார்.பின்னர் அந்த வாலிபரை விசாரித்த பொழுது அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிச் செல்ல முயன்ற வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38 )என்பது தெரியவந்தது .மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here