தேவேந்திர குலத் தலைவர் மீது குண்டு வீசியவர் அடையாளம் தெரிந்தது

0
1877


இன்று காலை வழக்கொன்றின் பிணை நிபந்தனைப்படி கையெழுத்திடுவதற்காக தேவேந்திரர் குல எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் தனது ஆதரவாளர்களுடன் நெல்லை தச்சநல்லூா் காவல்நிலையம் சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். கண்ணபிரானும் மற்ற ஆதரவாளர்களும் காவல் நிலையத்துக்குள் சென்றுவிட கிங்ஸ்டன் என்பவர் காயம் அடைந்துள்ளார்.
மொத்தம் 5 வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 4 குண்டுகள் வெடித்துள்ளன. வெடிக்காத நிலையில் 5வது வெடிகுண்டை நிபுணர் குழு கண்டு எடுத்துள்ளது.
அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது வெடிகுண்டு வீசிய 6 பேர் அடையாளம் தெரிந்துள்ளது.போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here