தேனியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில்
நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அந்த கோரிக்கை மனுவில் மேற்கு தொடர்ச்சி மலையில் வளத்தை பாதுகாக்கவும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற நாசகர திட்டம் தொடர்பாக டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனம் வன உயிர் வாரிய அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தை தமிழ்நாடு வனத்துறை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட மாவட்ட வன அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது













