செல்போனை பார்த்த மனைவியை அடித்து உதைத்த கணவன் கைது

0
533


போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஒயிட் தெருவைச் சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் ஶ்ரீமது ( 37). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஶ்ரீமது தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கும் இவரது மனைவி ஆரோக்கிய கிளாரா( 32) ஆகியோருக்கு இடையே திருமணம் ஆனது முதல் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து ஆரோக்கிய கிளாரா சென்னையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இதையடுத்து கணவர் ஸ்ரீமது மனைவியை தன்னுடன் மீண்டும் வந்து சேர்ந்து வாழுமாறு கூறிவந்தார் .இதை அடுத்து ஆரோக்கிய கிளாரா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழத் துவங்கினார். இந்நிலையில் நேற்று மாலை ஆரோக்கிய கிளாரா போன் செய்வதற்காக கணவரின் செல்போனை எடுத்து பேசினார். பேசி முடித்துவிட்டு  செல்போனை பார்த்துக்கொண்டே இருந்தால் இதை பார்த்த கணவர் ஶ்ரீமது எதற்காக எனது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் ஶ்ரீமது தனது மனைவி ஆரோக்கிய கிளாராவை அடித்து உதைத்தார். மேலும் கீழே பிடித்து தள்ளிவிட்டார். தொடர்ந்து ஸ்ரீ மதுவின் தந்தை சிங்காரம் (61)  ஆரோக்கிய கிளாறாவை அடித்தார். இதையடுத்து காயமடைந்த ஆரோக்கிய கிளாராவை அவரது உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து ஆரோக்கிய கிளாரா போத்தனூர் போலீசில் அளித்த புகாரின் பெயரில் கணவர் ஸ்ரீ மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here