பெங்களூரு அவ்னாஸ் ஐ.பி .ஆர் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தின் மேலாளர் சோமசுந்தரம்.
இவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு எஸ்.பி யிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘ பிரபல நிறுவனங்களின் சட்டைகளை விற்பனை செய்ய எங்கள் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது. ஆனால், அந்த பெயரில் போலியான சட்டை தைத்து விற்பனை செய்யப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியிருந்தார்.
இது குறித்து விசாரிக்க கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. சோதனை நடத்திய போலீசார் ஈரோடு மாவட்டம் முனியப்பன் கோயில் வீதியிலுள்ள மஹி என்டர்பிரைசஸ் என்ற கடையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான சட்டைகள் விற்பனைக்கு வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீஸார் சட்டைகளை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு கருங்கல்பாளையத்தில் சேர்ந்த பவன் சர்மா (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 4.4 லட்சம் மதிப்பிலான 640 போலி சட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.













