செங்கம் வனப்பகுதியில் எலும்புகூடு

0
1076

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் வனப்பகுதியில் சிலர் விறகுக்காக சென்ற போது மனித எலும்பு கூடு உள்ளதை கண்டு அதிர்ச்சியுற்று பாச்சல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் பாச்சல் காவல்துறையினர் எலும்பு கூடு உள்ள பகுதிக்கு நேரில் சென்று எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரனையில் கடந்த 11 மாதங்களுக்கு முன் குடும்ப தகறாறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய தானகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவராக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அவரது உறவினர்களை அழைத்து காண்பித்தபோது அவர் அணிந்திருந்த உடைகளை வைத்து காமராஜ் தான் என அடையாளாம் காண்பித்தனர். பின்னர் எலும்பு கூட்டை கைப்பற்றி,
உடற்கூறு ஆய்வு செய்ய திருவண்ணாமலையில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காமராஜ் தானாக சென்று தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என பாய்ச்சல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here