சென்னையில் தொடரும் போலீஸ் _ வாகன ஓட்டி தகராறு

0
780

சென்னை சேத்துப்பட்டில் வழக்கறிஞர் என கூறிக் கொண்ட பெண் ஒருவர், காரில் மாஸ் அணியாமல் வந்த தனது மகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்துகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக பேசினார்.

அதைப்போல முத்தியால்பேட்டையிலும் போலியான பாஸில் வந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் இடம் தகராறில் ஈடுபட்டார். சாபமிட்டார்.

இன்று காலைகோயம்பேடு பேருந்து நிலையம் பின்புறத்தில் பணியில் இருந்த காவலர்,தவறான வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முயன்றார்.அப்போது அவர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏக வசனத்தில் பேசியும், அவரை செல்போனில் படம் எடுக்க முயன்றும் தகராறு செய்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here