சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.











