குட்கா, வாகனம் பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

0
1138

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேய உள்ள தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவகலின் அட்ப்படையில் தேவதனப்பட்டி காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையில் உள்ள காட்ரோடு சோதனைச்சாவடியில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் இத்ரிஸ்ஹான் மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சென்னையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

சோதனையின் போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் 13 மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது வாகன ஓட்டுனர் வகனத்தை நிற்த்திவிட்டு தப்பி ஓடிணார். வாகனத்தில் வந்த கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்(30) மற்றும் பாண்டித்துரை(42) ஆகிய இருவரையும் தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கடத்திவரப்பட்ட குட்கா புகையிலை மதிப்பு 65,000 ரூபாய் என்றாலும் தற்போது அரசு மதுபான கடைகள் அடைப்பு உள்ளிட்டவைகளால் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் பொழுது அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் மதிப்பிற்கு விற்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here