ஹெல்மெட் அணியவில்லை கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்

0
1401

சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன், நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இது குறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பரமேஸ்வரன், நந்தினி தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் ஜெயகவுரியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here