சங்கரன்கோவில்- கோவில்பட்டி செல்லும் சாலையில் மலையாங்குளம் அருகே இருசக்கர வாகனமும் பொலிரோ காரும் நேருக்கு நேர் மோதின. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை காசிராஜன் மற்றும் மகன் இளையராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.








