கர்நாடக சுற்றுலாத்துறையால் இயக்கப்பட்ட தங்க ரதம் ரயில் சகல வசதிகளோடு ராஜதோரணையில் இயக்கப்பட்டது. இதற்கு 2,40,000 ரூபாயிலிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. 3 நாட்கள் உணவுடன் 7 நாட்கள் இயக்கப்பட்டுவந்தது.
ஆனால், தொடர்ந்து ரயில் நட்டத்தில் இயங்கியுள்ளது. இதுவரை 41 கோடி ரூபாய் வரை இழப்பு என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக அதன் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.