மதிச்சியம் காவல் நிலையத்தில் போக்குவரத்து போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார், ராஜ்குமார்.
இவர், அழகர்கோவில் மெயின்ரோடு சர்வேயர் காலனி சிக்னலில் பணியில் இருந்தார்.
அப்போது, விதிகளை வேகமாக வாகனம் ஓட்டிய ஒருவரை தடுத்து நிறுத்தி அவரை எச்சரித்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர், குடிபோதையில் இருந்ததால் போக்குவரத்து போலீஸ் ராஜ்குமார் சரமாரியாக தாக்கினார் .
இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, போக்குவரத்து போலீஸ் ராஜ்குமாரை தாக்கிய ,அண்ணா நகர் சதாசிவநகரைச் சேர்ந்த அய்யப்பன் 53 என்பவரை கைது செய்தனர்.