கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரஜிகுமார் (41) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த நிலையில் இதில் சிக்கிய அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









