கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் அமிர்தம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி, விற்பனை மையம் செயல்படுகிறது. இந்தக் கடையில் முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீவைத்து சென்றுள்ளார். அதில் அந்த கடையில் இருந்த எண்ணெய் முற்றிலும் நாசமானது.
அந்த காட்சிகள் அனைத்தும் கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததால் , தற்போது கடலூர் புதுநகர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த கம்மியம்பேட்டை, செம்மண்டலம் பகுதிகளில் மரச்செக்கு எண்ணெய் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளதால் தொழில் போட்டி காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளும் அதை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது. இதை தொடர்ந்து, எண்ணெய் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதோம் கடைக்கு தீவைத்த காணொளி”