கொரோனா தடுப்பூசிக்காக கோவின்(Cowin) இணையதள பக்கம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்வதற்கான தகவல்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி இருப்பு,தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு போன்றவை இடம்பெற்றிருக்கும். மேலும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் முதல் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பான விவரங்கள் இருக்கும்.
இவ்வாறு முழுமையாக கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ள கோவின் (Cowin) இணையதளத்தில் , இந்தி, ஆங்கிலம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகள் இடம்பெற்ற நிலையில் தமிழ்மொழி இடம்பெறாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இரு நாட்களில் மொழி பதிவேற்றம் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்ததாக தமிழக அரசின் தரப்பில் இரு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந் நிலையில் இன்று இணையதளத்தில் 12வது இடத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. எவ்வாறு புறக்கணித்தாலும், இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தடுப்பூசி தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் வழி பிறந்துள்ளது.














