இளநரையைத் தடுக்க…

0
496

25 வயதானவர்களுக்கு நரைமுடி வருவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, மரபணு தாக்கம் எனப் பெரும்பாலான தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களின் தாத்தா அல்லது அப்பாவுக்கு இளநரை தாக்கம் இருந்தால், உங்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

இளநரைக்கு, புகைப்பழக்கமும் மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று. வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் மற்றும் அத்தியாவசிய அமீனோ அமிலங்கள் இளநரையைக் கட்டுப்படுத்துகின்றன. 1/2 கப் தேங்காய் எண்ணெயைக் கொதிக்க வைத்து அதில் 1/4 கப் வெந்தயம் சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்க விடவேண்டும். சூடு தணிந்து அரை வெப்பநிலைக்கு வந்ததும், வெந்தயத்தை தனியே வடிகட்டி எடுத்து விட்டு எண்ணெயை மேலும் குளுமைப்படுத்தவேண்டும். இரவில் இந்த எண்ணெயால் மசாஜ் செய்து ஊற வைத்து காலையில் ஷாம்புகொண்டு கூந்தலை அலசலாம். வாரம் இருமுறை இப்படிச் செய்யலாம். தற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் காணப்படும் ஆப்பிள் சீடர் விநிகர்கொண்டும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் விநிகரோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தலையில் ஊற்றி அனைத்து இடங்களுக்கும் படரவிட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு ஷாம்புகொண்டு அலசவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோன்று செய்துவந்தால், இளநரையைத் தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here