தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

0
961

கடந்த 21 ஆம் தேதி  கோவை குணியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் செல்வம் மளிகைகடையில் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர் .இந்த செயின் பறிப்பு குறித்த 

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து குனியமுத்தூர் போலிசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவை கரும்புக்கடையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்ததில் செயின்பறிப்பு சம்பவத்தின்போது இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தது தெரியவந்தது.

மேலும் அவனிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டதில் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பைசல் ரஹ்மான்  போலிசார் கைது செய்தனர் இவர் குணியமுத்தூர், பி.கே.புதூர், இடையர்பாளையம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணைதலைவராக இருக்கும்  பைசல் ரஹ்மான்  சங்கிலிபறிப்பு கொள்ளையன் என்பது கோவை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பைசல் ரஹ்மான் காங்கிஸ் கட்சியின் மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ,கோவை திமுக முக்கிய பிரமுகர்கள் உடன்   எடுத்துக்கொண்ட புகைபடம்  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here