சாரல் மழைக்கே தாக்குப்பிடிக்காத மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலை

0
284

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி சாலை மேலப்பாளையம் நகரத்தில் மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

இச்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன . ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து சென்று வரும் இச்சாலையை பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ளது. கமழைக்காலங்களில் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் இச்சாலையை சூழ்ந்துள்ளது.

இன்று நெல்லை மாநகரில் பெய்த அரை மணி நேர சாரல் மலைக்கு தாக்கு பிடிக்காமல் ரெட்டியார்பட்டி ரோடு கரீம் நகர் மற்றும் தாய் நகர் அருகே சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பள்ளிக்கூடம், மதரசா முடிந்து திரும்பிய மாணவர்கள் இந்த சாக்கடை நீரிலே நடந்து சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.

சாக்கடை நீர் தேங்குவதை அப்புறப்படுத்தி இச்சாலையை விரைந்து சீர் செய்து, புதிதாக வடிகால் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here