2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கு பாஜகவிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது.
வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணை போன்ற விவகாரங்களில் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி நாளை மறுநாள் (புதன்கிழமை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை மேற்கு வங்க மாநில தலைமை செயலகம் உறுதி படுத்தியுள்ளது.