தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லையை இரண்டாக பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த மாவட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்து ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்கான விழா இன்று காலை தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடக்கிறது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கின்றனர். இதற்காக 2 ஆயிரம் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.