கரூர் கொசுவலை நிறுவன அதிபர் சிவசாமி தனது உற்பத்தி பொருளை உலகமெங்கும் விநியோகித்து வருகிறார். அவரது தொழிற்சாலை, வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டிலிருந்து கணக்கில் வராத 32 கோடி ரூபாயும் 10 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் 435 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.