தூத்துக்குடிக்கு கேட்டால்… மதுரைக்கு டிக்கெட் தரும் கண்டக்டர்…!

0
904

தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு 11 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.


பேருந்தில் இருந்த கண்டக்டரிடம் தூத்துக்குடி ஸ்பிக் நகருக்கு டிக்கெட் கேட்ட போது,’ அங்கெல்லாம் டிக்கெட் தர முடியாது. வேண்டுமென்றால் மதுரைக்கு டிக்கெட் எடுத்து தூத்துக்குடியில் இறங்கிக் கொள்ளுங்கள்’ என்று கறாராக பேசியுள்ளார்

இதையடுத்து இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது கடைசியில் வேறு வழியின்றி மதுரைக்கு 180 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி தூத்துக்குடி ஸ்பிக் நகரில் இறங்கியுள்ளார்.

இதற்கிடையே மணிகண்டன் கண்டக்டரிடம் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here