நாசரேத் பேராசிரியை மரணத்தில் மர்மம்

0
3593

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மார்க்கெட் தெருவில் செல்வராஜ் மகன் பிரவீன்குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷெர்லின் கோல்டா (35 ). . பட்டதாரியான இவர்கள் இரண்டு பேரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்தனர் .இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

ஷெர்லின் கோ ல்டா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததால் கல்லூரிக்கு போகாமல் விடுப்பில் இருந்தார் . சில நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்று வீடு திரும்பிய கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் பிரவீன் குமார் தான் குளியலறைக்கு சென்ற நிலையில் ஷெர்லின் கோல்டா படுக்கையறைக்குள் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .

ஆபத்தான நிலையில் அவரை மாமனார் ஜெபசிங் காரில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார் ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். அதுகுறித்து நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிவு செய்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் திருமறையூர் சி எஸ் ஐ மறுரூப ஆலயம் கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்து போன ஷெர்லின் கோல்டா தகப்பனார் ஜெபசிங் சாமுவேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எழுத்து மூலம் மனு அளித்துள்ளார். அதில், ’24 11 2024 அன்று எனது மகளின் நினைவிடத்தில் விசேஷம் நடந்தது அந்த இடத்தில் சென்ற போது எனது பேரன் டிஜோ வின்ஸ் என்னிடம் எனது மகளுக்கு நடந்த கொடுமைகளையும் எனது மகளின் கணவர் பிரவீன் குமார் அடித்து துன்புறுத்தியதையும் கூறினான். உடனே அதிர்ச்சி அடைந்தேன் . எனது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையும் எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை ஆகவே எனக்கு மகள் இறப்பில் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனது மகளின் கணவர் பிரவீன் குமார் அடித்து தான் கொலை செய்திருப்பாரா? இல்லை கொலை செய்ய தூண்டியிருப்பாரா? என சந்தேகம் எழும்பியுள்ளது . ஆகவே எனது மகளின் இறப்பு மீது போதிய விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் கைது செய்யப்பட வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பேரன் தாத்தாவிடம் கூறிய ஆடியோவும் வீடியோவும் பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது இந்த சம்பவம் நாசரேத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை மக்கள் மத்தியில் கொடுத்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here