சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலை அருகே உள்ள கிரஷரில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் சிவகுமார்(42), இவர் தற்போது ஓய்வு எடுப்பதற்காக கிரஷர் ஓரம் மரத்தில் நிழலில் படுத்து உறங்கியுள்ளார்.
இதனை கவனிக்காமல் ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷ்குமார் என்பவர் படுத்திருந்த சிவகுமார் மீது ஜேசிபியை ஏற்றி இறக்கி விட்டார். இதில் உடல் நசுங்கி சிவகுமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.













